சடுகுடு ஆடும் தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் என்ன?


தங்க நகைகள்

கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வரும் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம் வாங்கும் பெண்

தங்கம் இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் இல்லை என்றாகி விட்டது. திருமணம், காதுகுத்து, சடங்கு என அனைத்து நிகழ்ச்சியிலும் தங்கத்தின் மதிப்பு கூடியே வருகிறது. இதன் காரணமாக பெண்களுக்கு தங்கம் பிடித்தமான ஆபரணமாக உள்ளது.

இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. இதன் காரணமாக பண்டிகை தினங்களில் தமிழகத்தில் தங்கம் வாங்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தங்க நகைகள்

இந்நிலையில், தங்கம் விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.40 உயர்ந்து 46,680 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.05 உயர்ந்து 5,835 ரூபாய்க்கு விற்பனையானது.

இன்றைய (ஜனவரி 25) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து 46,640 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.05 குறைந்து 5,830 ரூபாயாக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 6,300 ரூபாயாக விற்பனையாகிறது.

24 கேரட் தங்கம் சவரன் 50,400- ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை 70 காசுகள் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கிராம் வெள்ளி 77.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 77,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

x