வீடு தேடி வருகிறது பழநி பஞ்சாமிர்தம்... அஞ்சல் துறை மூலம் பெறலாம்!


பழநி: இந்து சமய அறநிலையத்துறை மற்றும் இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து பழநி முருகன் கோயில் அபிஷேக பஞ்சாமிர்தத்தை வீட்டில் இருந்தே பெறும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

பழநி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் மலை வாழைப்பழம், தேன், நெய், பேரீச்சம்பழம், நாட்டு சர்க்கரை, ஏலக்காய், கற்கண்டு உள்ளிட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் சிறிதளவு கூட தண்ணீர் சேர்ப்பதில்லை. கெட்டுப் போகாமல் இருக்க செயற்கையாக எந்த வேதிப்பொருட்களும் இதில் கலக்கப்படுவதில்லை. பஞ்சாமிர்தம் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் வழிகாட்டுதல்படி தயாரிக்கப்படுகிறது.

இந்து சமய அறநிலையத்துறை, பழநி கோயில் நிர்வாகம் மற்றும் இந்திய அஞ்துல் துறையுடன் இணைந்து பழநி முருகன் கோயில் அபிஷேக பஞ்சாமிர்தத்தை வீட்டில் இருந்தே பெறும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன்படி, www.tnhrnce.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது அஞ்சல் நிலையங்களிலோ பஞ்சாமிர்தத்துக்கான கட்டணத்தை செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.

பின்னர், பஞ்சாமிர்தம், சுவாமி ராஜ அலங்கார புகைப்படம் ஒன்று, விபூதி ஆகியேவை அஞ்சல் துறை மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.

x