ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை... கலக்கத்தில் இல்லத்தரசிகள்!


தங்கம்

நேற்று விலை குறைந்து விற்பனையான தங்கம் இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, 44,480 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கம்

தங்கம் நேற்று ஒரு கிராம் 5,515 ரூபாய்க்கும், ஒரு சவரன் 44,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,560 ரூபாயாகவும், சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 44,480 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து, 6,030 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து, 48,240 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி

வெள்ளியின் விலையில் 1 ரூபாய் உயர்ந்து ரூ.78 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 78,000 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

x