நேரம் தவறாமையில் உலகளவில் முதலிடம்... தென்னிந்தியாவின் இந்த விமான நிலையத்துக்கு பாராட்டுகள் குவிகின்றன!


பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம்

நேரம் தவறாமையில் உலகளவில் முதலிடம் பிடித்த விமான நிலையமாக, பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேசளவில் விமான சேவைகளை பகுப்பாய்வு செய்யும் நிறுவனமான சிரியம், இதனை அறிவித்துள்ளது.

உலகில் மிகவும் சரியான நேரத்தில் செயல்படும் விமான நிலையம் என்ற அங்கீகாரத்தை, தொடர்ந்து 3 மாதங்களாக கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. விமானங்கள் சரியான நேரத்தில் புறப்பட்டுச் செல்வதன் அடிப்படையில் நடப்பு வருடத்தின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3 மாதங்களில் இந்த சாதனையை தொடர்ந்து கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் படைத்துள்ளது.

இந்த சாதனை பதிவுகள், ஜூலை மாதத்தில் 87.51%, ஆகஸ்ட் மாதத்தில் 89.66% மற்றும் செப்டம்பரில் 88.51% என்று அமைந்துள்ளன. இதன் மூலம் நேரம் தவறாமையில் உலகின் முதன்மையான விமான நிலையமாக கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் தன்னை தக்கவைத்துள்ளது. அதிலும் செப்டம்பர் 2023-ல் உச்ச அளவாக, 88.51% சரியான நேரத்தில் விமானங்கள் புறப்பட்டதாக, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு, சிரியம் நிறுவனத்தின் அறிக்கை பாராட்டு தெரிவித்ததுள்ளது.

பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம்

88 வழித்தடங்களை உள்ளடக்கிய நெட்வொர்க் மற்றும் 35 விமான நிறுவனங்களுடனான ஒத்துழைப்புடன், தென்னிந்தியாவில் விமானப் பயணத்திற்கான முக்கிய மையமாக பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் தனித்து நிற்கிறது. சிரியம் அறிக்கை வெளியானதை தொடர்ந்து கெம்பகவுடா விமான நிலையம் மற்றும் அதன் நிர்வாகத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கடந்த மூன்று மாதங்களில் நேரம் தவறாமையில், உலகளவில் முதல் 5 இடங்களுக்குள் வந்த மற்ற விமான நிலையங்களில் 3வது இடத்தையும் மற்றொரு தென்னிந்திய விமான நிலையமே பிடித்துள்ளது. அது ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம். இரண்டாம் இடத்தில் சால்ட் லேக் சிட்டி சர்வதேச விமான நிலையமும், 4 மற்றும் 5வது இடங்களில் மினியாபொலிஸ் செயின்ட் பால் சர்வதேச விமான நிலையம் மற்றும் எல் டொராடோ சர்வதேச விமான நிலையம் ஆகியவையும் இடம்பிடித்துள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!

x