சிவகங்கை மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒன்றாக படித்த மாணவ மாணவிகள் ஒரே கலரில் ஆடை அணிந்து, மீண்டும் ஒன்றாக சந்தித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சிவகங்கையில் அரசு உதவி பெறும் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் 1976 முதல் 1984 வரை ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை தொடக்கக் கல்வியை பயின்ற 20 மாணவிகள் உட்பட 50 பேர் இன்று 40 ஆண்டுகளுக்குப் பிறகு அதே பள்ளியில் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக சிவகங்கை சிவன் கோயிலில் ஒன்றிணைந்து அங்கிருந்து மேளதாளம் முழங்க கிராமிய கலைஞர்களுடன் ஊர்வலமாக சென்று பள்ளிக்கூட வாயில் முன்பு மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக நடனமாடி பள்ளி வளாகத்திற்குள் சென்றனர். பள்ளி வளாகத்தில் தாங்கள் படித்த காலத்தில் இருந்த ஓய்வு பெற்ற ஒரு சில ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அவர்களை வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஆசிரியர்களை கௌரவப்படுத்தி அவர்களிடம் பழைய மாணவர்கள் ஆசி பெற்றனர். பள்ளிக்கூடத்திற்கு தேவையான மெயின் கேட் மற்றும் தேவையான பொருட்களை பள்ளிக்கு வாங்கி தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 40 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பழைய மாணவர்கள் அவர்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டதோடு தொடர்ந்து பள்ளி வளாகத்தை பார்வையிட்டு, ஒன்றாக புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!
கருணாநிதியின் ‘மூத்த பிள்ளை’க்கு வந்த சோதனை!
ஒரு சிக்ஸர் கூட அடிக்கலை… 20 ஓவரில் 427 ரன்கள் எடுத்து மகளிர் கிரிக்கெட் அணி உலக சாதனை!
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!
ஜீன்ஸ், லெக்கின்ஸ் போட்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது... வக்கீல்களுக்கு பார் கவுன்சில் கறார் உத்தரவு!