குட்நியூஸ்...தங்கம் சவரனுக்கு ரூ.320 அதிரடியாக குறைந்தது!


தங்க நகை

தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 46,480 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

தங்கத்தின் விலை கடந்து சில நாட்களாக அதிகப்படியாக உயர்வதும், மிகக் குறைந்த அளவில் குறைந்து வருவதுமாக இருந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 60 ரூபாய் உயர்ந்த போதும், அதே அளவிற்கு 60 ரூபாய் குறைந்தும் விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.

தங்க நகை

நேற்று கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் குறைந்த நிலையில், இன்று மீண்டும் தங்கத்தின் விலை சரிவைச் சந்தித்துள்ளது. கிராமிற்கு 40 ரூபாய் வரை குறைந்து இன்று ஆபரண தங்கம் ஒரு கிராம் 5,810 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் ஒரு சவரன் ஆபரண தங்கம் 320 ரூபாய் குறைந்து, 46,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 44 ரூபாய் குறைந்து 6,338 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்க நகை

இதே போல் வெள்ளியின் விலையும் கிராமிற்கு 60 பைசா குறைந்த 77 ரூபாய் 40 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி 77,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலத்தில் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதால், தங்கம் வாங்குவோர் ஆறுதல் அடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

புகழ் குன்றா பொன்மனச் செம்மல் |எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் ஸ்பெஷல்!

x