தொழில்நுட்ப கோளாறு சீரமைப்பு; மெட்ரோ ரயில் சேவை மீண்டது


தொழில்நுட்ப கோளாறால் சென்னை மெட்ரோ ரயில்கள் தாமதம்

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கோளாறு சீரமைக்கப்பட்டு மீண்டும் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் சென்றுள்ளனர். இதன் காரணமாக சென்னையில் பெரும்பாலான சாலைகள் போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி மெட்ரோ ரயில்கள் இன்று காலை முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

தொழில்நுட்ப கோளாறு சீரமைக்கப்பட்டதாக அறிவிப்பு

இந்நிலையில் சென்னை விமான நிலையம் முதல் அண்ணாசாலை வழியாக விம்கோ நகர் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவையில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை மெட்ரோ ரயில் இயக்கும் பணிகளில் தடை ஏற்பட்டதால் அனைத்து மெட்ரோ ரயில்களும் காலதாமதமாக இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்

இந்த நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மெட்ரோ ரயில் சேவையில் நிலவிய தொழில்நுட்ப கோளாறு சீரமைக்கப்பட்டு, தற்போது மீண்டும் சேவைகள் துவங்கி உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வழக்கமான ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி நீலம் மற்றும் பச்சை வழிகளில் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

x