அரிசி, கோதுமை, சர்க்கரை பொருட்களின் ஏற்றுமதி தடை நீக்கப்படுகிறதா? மத்திய அரசின் நிலைப்பாடு இதுதான்!


அரிசி

அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற வேளாண் பொருட்களின் ஏற்றுமதி தடைகளை நீக்க மத்திய அரசு முடிவு எதையும் எடுத்துள்ளதா என்ற கேள்விக்கு மத்திய உணவு அமைச்சர் பியூஸ் கோயல் பதில் அளித்துள்ளார்.

இந்தியாவில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் தொடர்ந்து எகிறி வருகின்றன. இவை ஒட்டுமொத்தமான விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்க விகிதத்தை அதிகரிக்கச் செய்து. சாமானிய குடிமக்களை தத்தளிப்பில் ஆழ்த்தி வருகின்றன. எனவே விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைக்க அரிசி, கோதுமை, சர்க்கரை, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருகளுக்கான ஏற்றுமதி தடையை மத்திய அரசு நீட்டித்து வருகிறது.

கோதுமை

ஆனால் இந்த ஏற்றுமதியை நம்பியுள்ள நிறுவனங்களும், அதனைச் சார்ந்தோரும் இதனால் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்திய ஏற்றுமதி வர்த்தகத்தை உயிரோட்டமாக வைத்துக்கொள்ள ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இவற்றின் மத்தியில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டினை அறிவித்துள்ளது. இதன்படி அரிசி, கோதுமை, சர்க்கரை, வெங்காயம் உள்ளிட்ட வேளாண் பொருட்களின் ஏற்றுமதி தடைகளை நீக்க தற்போதைக்கு யோசனை இல்லை என மத்திய உணவு அமைச்சர் பையூஸ் கோயல் தெரிவித்துள்ளார். ஏற்றுமதி மட்டுமன்றி, உள்ளூர் வர்த்தகத்தை பாதிக்கச் செய்யும்படியான, கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பான யோசனையும் இப்போதைக்கு இல்லை என அவர் தெளிவு படுத்தி உள்ளார்.

”உள்நாட்டில் கிடைப்பதை அதிகரிக்கவும், பணவீக்கப் போக்கு மற்றும் விலை உயர்வை கட்டுப்படுத்தவும் அரசு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் ஏற்றுமதியை தடை செய்துள்ளது. உள்நாட்டு விநியோகத்தை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு அரிசிக்கு 20 சதவீதம் ஏற்றுமதி வரிகளைய்ம் விதித்தது. ஆனபோதும் வளரும் நாடுகளின் உணவு பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, அதன் அரசுகள் விடுத்த கோரிக்கைகளின் அடிப்படையில் அரிசியை வழங்கவும் செய்துள்ளது. இந்த வகையில் இந்தோனேசியா, செனகல், காம்பியா போன்ற நாடுகளுக்கு இந்தியா அரிசி வழங்கி உள்ளது” என பையூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பையூஷ் கோயல்

மேலும் ”சில்லறை சந்தையில் அரிசியின் விலை டிசம்பர் மாதம் 12.3 சதவீதம் உயர்ந்தது. மேலும் அக்டோபர் 2022 முதலே அரிசியின் விலை உயர்ந்தபடியே வருகிறது. இதனை கட்டுப்படுத்த இந்திய உணவுக் கழகம் கையிருப்பில் இருந்து உபரி அரிசியை வெளிச்சந்தையில் விடுவித்து வருகிறது. 2022 மே மாதம் முதல் கோதுமை ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது.2023 - 2024 ஜூலை - ஜூன் இடையிலான ஓராண்டில் மட்டும், இந்தியாவில் 114 மில்லியன் டன் கோதுமை அறுவடை சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில் உள்நாட்டு விநியோகத்தை பூர்த்தி செய்ய, கோதுமையை இறக்குமதி செய்வது என்பதும் சரியாக வராது. வேளாண் அமைச்சகத்தின் உணவு தானிய உற்பத்தியின் முதல் முன்கூட்டிய மதிப்பீட்டின்படி இது முடிவு செய்யப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

x