ஒகேனக்கல்லுக்கு காவிரி நீர்வரத்து 9,500 கன அடியாக அதிகரிப்பு!


ஒகேனக்கல்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 9,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியிலிருந்து, ஒரே நாளில் 9,500 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கலில் உள்ள மெயின் அருவி, சினி ஃபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

பிலிகுண்டுலு

கர்நாடகாவில் நீர்திறப்பு அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,528 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 2வது நாளாக, 5,500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் கர்நாடகா நேற்றைய தினமே தண்ணீர் திறப்பை அதிகரித்துள்ளது.

x