ராமேசுவரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 37 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவிகள் சந்திப்பு


ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்பாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவிகள் சந்திப்பு பள்ளிக்கு கம்ப்யூட்டரை நினைவுப் பரிசாக வழங்கிய முன்னாள் மாணவிகள்.

ராமேசுவரம்: ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்பாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவிகளின் சந்திப்பு நடைபெற்றது.

ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்பாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1981 முதல் 1987ம் கல்வி ஆண்டு வரையிலும் பயின்ற மாணவிகள் 37 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டனர். பள்ளியின் முன்னாள் ஆசிரியை இந்திராணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் கடந்த கல்வியாண்டில் 10,11,12 வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளுக்கு கேடயமும், சான்றிதழழும் வழங்கப்பட்டன. மேலும் தாங்கள் பயின்ற பள்ளிக்கு கம்ப்யூட்டர் ஒன்றையும் நினைவு பரிசாக முன்னாள் மாணவிகள் வழங்கினர்.

தொடர்ந்து முன்னாள் மாணவிகள் தாங்கள் பயின்ற வகுப்பறைகளுக்கு சென்று தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த சந்திப்பு ஆண்டுதோறும் நடக்க வேண்டும். பள்ளியில் அதிக மதிப்பெண் பெறும் மாணவிகளுக்கு உதவ வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் தங்கம்மாள் தலைமையிலான ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

x