உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுப்பு... மருத்துவமனைகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!


உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

உறவினர்கள் அல்லாதவர் உறுப்பு தானம் வழங்க முன் வரும்போது, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள் மறுப்பது, சட்டவிரோதம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கோவையைச் சேர்ந்த மருத்துவர் காஜா மொய்தீனுக்கு சிறுநீரகம் செயலிழந்ததை அடுத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அவரது மனைவி மற்றும் குழந்தைகளிடமிருந்து சிறுநீரகம் பெற முடியாத நிலையில் ராமாயி என்பவர் காஜா மொய்தீன் மீது கொண்ட அன்பின் காரணமாக சிறுநீரக தானம் செய்ய முன்வந்தார்.

ஆனால், ராமாயிக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால், அவரிடமிருந்து சிறுநீரக தானம் பெற தமிழ்நாடு மருத்துவமனைகள் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து, கேரளாவின் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழ்நாடு அரசிடம் உறுப்பு மாற்று சிகிச்சை தடையில்லா சான்றிதழ் பெற்று வருமாறு கேரளா மருத்துவமனை தெரிவித்தது.

இதனால் தடையில்லா சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மருத்துவர் காஜா மொய்தீன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

மருத்துவமனை

போதிய சட்ட விழிப்புணர்வு இல்லாததால் உறவினர் அல்லாதவர் உறுப்பு தானம் அளிக்க முன்வரும்போது, அறுவை சிகிச்சை செய்ய தயக்கம் காட்டுவதாக குறிப்பிட்ட நீதிபதி, இது குறித்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு, தமிழ்நாடு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதையும் வாசிக்கலாமே...

சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாகிறார் காஜல் அகர்வால்!

x