ஒரு லிட்டரில் 2,40,000 நானோ துகள்கள்... பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரில் ஒளிந்திருக்கும் ஆபத்து


ஒரு லிட்ட தண்ணீரில் 2,40,000 நானோ துகள்கள்

பாட்டிலில் அடைத்து விற்கும் குடிநீரில் ஒளிந்திருக்கும் ஆபாயத்தை, மருத்துவ ஆய்வறிக்கை ஒன்று பகீர் பகிரங்கம் செய்திருக்கிறது.

நடப்புலகில் பிளாஸ்டிக் கழிவுகளால் நேரிடும் பாதிப்புகளை ஓரளவுக்கேனும் நாமறிவோம். நிதர்சனத்தில் பிளாஸ்டிக் கழிவுகளின் பாதிப்புகள் நமது கற்பனைக்கும் எட்டாதவை. அவற்றில் முக்கியமானது நானோ பிளாஸ்டிக். அமெரிக்காவின் நேஷனல் அகடெமி ஆஃப் சயின்ஸ் வெளியிட்டிருக்கும் அண்மை ஆய்வறிக்கை நானோ பிளாஸ்டிக்கின் ஆபத்துகளை சுட்டிக்காட்டுகிறது.

குடிநீருக்கான பிளாஸ்டிக் பாட்டில்கள்

ஆய்வாளர்கள் அமெரிக்காவின் 3 முன்னணி நிறுவனங்களின் 1 லிட் தண்ணீர் அடைக்கப்பட்ட 25 பாட்டில்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். ஆய்வின் முடிவில் ஒவ்வொரு பாட்டிலிலும் சுமார் 1,10,000 முதல் 3,70,000 வரையிலான நானோ பிளாஸ்டிக் துகள்கள் அடையாளம் காணப்பட்டன. அதாவது சராசரியாக 2,40,000 நானோ துகள்கள்!

பிளாஸ்டிக் துகள்களில் மைக்ரோ பிளாஸ்டிக் வரை மட்டுமே மனித ஆராய்ச்சி முன்னேறி உள்ளது. நானோ பிளாஸ்டிக் துகள்களை நேரடியாக அடையாளம் காண்பதற்கான தொழில்நுட்பம் இன்னமும் வளரவில்லை. தற்போதைய ஆய்வும் கூட அல்காரிதம் உதவியுடன் தோராயமாக கண்டறியப்பட்டவையே. பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரில் அடங்கியிருக்கும் நானோ துகள்களில் எண்ணிக்கை இதை விடவும் அதிகமாக இருக்கக்கூடும்.

நானோ துகள்கள் அறிவியல் பூர்வமாக மனித உடலில் பெரும் கேடுகளை விளைவிக்கக்கூடியவை. அதனுடைய நுண்ணிய அளவு காரணமாக எளிதில் உடலை துளைத்துக்கொண்டு, உள்ளுறுப்புகள் மற்றும் ரத்த ஓட்டத்தில் எளிதில் கலக்கக்கூடியவை. தொப்பூழ் கொடி வாயிலாக தாயின் வயிற்றிலிருக்கும் சிசுவையும் ஊடுருவக் கூடியது. உலகில் இனி பிறக்கபோகும் குழந்தைகளும் கூட பிளாஸ்டிக்கின் கேடுகளுடனே வரப்போகிறார்கள்.

பிளாஸ்டிக் பாட்டில் மூடியை திறந்து மூடும்போதும்...

வருடத்துக்கு 450 மில்லியன் டன் என்றளவுக்கு உலகம் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்து தள்ளுகிறது. இதில் மறுசுழற்சிக்கு செல்பவை சொற்பமே. பெருமளவு பிளாஸ்டிக் கழிவாக மண்ணில் சேர்கிறது. சிறுசிறுதுகள்களாக சிதைந்து அவை மண்ணிலும், நீரிலும் ஊடுருவுகின்றன. பின்னர் மைக்ரோ மற்றும் நானோ வடிவங்களில் மீண்டும் மனிதனையே தாக்குகின்றன. நாளுக்கு நாள் இவற்றின் அளவும் அதிகரித்தே வருகின்றன.

எவ்வளவுதான் பாதுகாப்பாக இருப்பினும் மனிதர்களால் நானோ பிளாஸ்டிக் துகள்களிடம் இருந்து தப்பிக்க முடியாது. வெறுமனே தண்ணீர் பாட்டிலின் மூடியை திருகித் திறந்து மூடுவதன் மூலம் மட்டுமே கணிசமான அளவு பிளாஸ்டிக் துகள்கள் குடிநீரில் சேர்கின்றன. இந்தப் போக்கில் பிளாஸ்டிக் துகள்கள் மனித உடலில் சேர்வது, ஆய்வுக்கும், கற்பனைக்கும் அப்பாற்பட்ட பாதிப்புகளை மனித உடலில் சேர்க்க காத்திருக்கின்றன.

இதையும் வாசிக்கலாமே...

அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு... முதல்வரின் அசத்தல் அறிவிப்பு!

முகமது ஷமி உள்பட 26 பேருக்கு அர்ஜுனா விருது... குடியரசு தலைவர் வழங்கினார்!

x