அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து உயிரிழந்த 16 குழந்தைகள்...களத்தில் இறங்கிய மும்பை உயர் நீதிமன்றம்!


மும்பை உயர் நீதிமன்றம்

மகாராஷ்டிராவில் உள்ள அரசு மருத்துவமனையில் 16 குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்துள்ள விவகாரத்தில் மும்பை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேத பரிசோதனைக்கூடம்

மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் ஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நேற்று 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், தற்போது மேலும் 7 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்த எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 48 மணி நேரத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 16 பேர் குழந்தைகள். இந்த உயிரிழப்புகளுக்கு மருந்துப் பொருட்களின் பற்றாக்குறையே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனினும், ஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனையின் டீன் ஷியாம் ராவ் வகோடே இதனை மறுத்துள்ளார். மருந்துகள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை என தெரிவித்துள்ள அவர், உரிய கவனிப்பு கொடுக்கப்பட்டும் நோயாளிகள் ஒத்துழைப்பு அளிக்காததே உயிரிழப்புக்குக் காரணம் என்று கூறியுள்ளார். செப்டம்பர் 30-ம் முதல் அக்டோபர் 1 வரை பிறந்த 3 நாட்களுக்குள் 12 குழந்தைகள உயிரிழள்ளதாகவும் மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.

"குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் 142 குழந்தைகள் சேர்க்கப்பட்டன. அவர்களில் 42 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டர் ஆகியவை உள்ளன. இவர்கள் அண்டை மாவட்டங்களான ஹிங்கோலி, பர்பானி, வாஷிம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். அண்டை மாநிலமான தெலங்கானாவின் கிராமங்களில் இருந்தும் சிலர் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று ஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனையின் டீன் ஷியாம் ராவ் வகோடே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரத்தை மும்பை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் முறையான மருத்துவம் கிடைக்கச் செய்ய அரசு கடமைப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்த வழக்கை வரும் 6-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

x