13,500 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங்... 104 வயதில் உலக சாதனை படைத்த மூதாட்டி!


104 வயதில் ஸ்கை டைவிங் செய்த மூதாட்டி

அமெரிக்காவின் சிகாகோ நகரில் 104 வயது மூதாட்டி ஒருவர், ஸ்கை டைவிங் செய்து சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தை சேர்ந்தவர் 104 வயதான டொரோத்தி ஹாஃப்னர். இவருக்கு ஸ்கை டைவிங் செய்வதில் நீண்ட நாட்களாகவே ஆர்வம் இருந்து வந்தது.

இதற்காக முறையான பயிற்சியும் பெற்று வந்தார். அதிகபட்ச உயரத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்து சாதனை படைக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் ஆசையாக இருந்து வந்தது.

கடந்த 2022 மே மாதம் ஸ்வீடனைச் சேர்ந்த 103 வயது லினியா இங்கேகார்ட் லாசன் என்பவர் ஸ்கை டைவிங் செய்து, உலகின் மிகவும் வயதான ஸ்கை டைவர் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார்.

104 வயதில் ஸ்கை டைவிங் செய்த மூதாட்டி

இதனை முறியடிக்க விரும்பிய டொரோத்தி, சிகாகோவில் இருந்து 85 மைல் தொலைவில் உள்ள விமான நிலையத்திலிருந்து விமான மூலம் வானிற்கு பறந்தார். பின்னர் சுமார் 13 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்தார்.

அவருடன் ஸ்கை டைவிங் பயிற்சியாளர் ஒருவரும் உடன் இருந்தார். இதன் மூலமாக மிக அதிக வயதில் ஸ்கை டைவிங் செய்தவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். விரைவில் இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

104 வயதில் ஸ்கை டைவிங் செய்த மூதாட்டி

104 வயதான நிலையில் டொரோத்தி, வாக்கர் உதவியுடன் நடமாடி வருவது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த சாதனையின் மூலம் சாதனைக்கு வயது ஒரு தடை இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளதாக, அவரது நண்பர்களும் உறவினர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

சிங்கிள் டீ குடிக்கிறதுல இவ்வளவு ஆபத்தா... உயிரை விலை பேசும் ஆய்வு முடிவுகள்!

அவர் என்ன மாமனா... மச்சானா... பிக் பாஸ் வீட்டில் தொடங்கிய முதல் சண்டை

x