ஜன-18ல் காவிரி நீர் ஒழுங்காற்று குழுக்கூட்டம்: 4 மாநிலங்களுக்கு அழைப்பு!


காவிரி

காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் ஜனவரி 18-ம் தேதி நடைபெற உள்ளதாக அதன் தலைவர் வினித் குப்தா அறிவித்துள்ளார்.

காவிரியில் இருந்து கர்நாடகா எவ்வளவு நீர் திறந்துவிட வேண்டும் என்பதை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்து வருகிறது. மேலும் ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகா, தமிழகத்திற்கு நீர் திறந்து விடுகிறதா என்பதையும் கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் டிசம்பர் மாதம் வினாடிக்கு 3,128 கனஅடி நீர் திறக்க ஒழுங்காற்று குழு பரிந்துரைத்திருந்தது.

காவிரி

மேலும் ஜனவரி மாதம் முதல் நாளில் இருந்து வினாடிக்கு 1,003 கன அடி நீர் திறக்குமாறும் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் வருகிற 18-ம் தேதி இந்த கூட்டம், தலைவர் வினித் குப்தா தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்குஅழைப்பு

இந்த மாநிலங்களைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தின் பங்கேற்று அடுத்த கட்டமாக தண்ணீர் திறப்பது குறித்து தங்கள் மாநில கருத்துகளை வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஜனவரி மாதத்திற்கான நீர் திறப்பு குறித்து ஆணையத்திற்கு அறிவுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x