புத்தகப் பிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டது பபாசி!


சென்னை நந்தனத்தில் நடைபெறும் புத்தகக் காட்சியில் ஜன.8ம் தேதி காலை 9 மணிக்கு முதல்முறையாக "சென்னை வாசிக்கிறது" என்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் புத்தகப் பிரியர்களுக்காக புத்தகக்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு புத்தகக்காட்சி ஜனவரி 3ம் தேதி தொடங்கி ஜனவரி 21ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து சென்னை நந்தனத்தில் 47வது புத்தகக்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஜனவரி 3ம் தேதி தொடங்கி வைத்தார்.

1000 அரங்குகளில் எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகள் பொதுமக்கள் மற்றும் புத்தக பிரியர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும். விடுமுறை நாட்களில் காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி வரை நடைபெறுகிறது.

மொத்தம் 19 நாட்கள் புத்தகக் காட்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலைசிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரைவீச்சுக்கள் இடம் பெற்று வருகிறது.

இந்த நிலையில் பபாசி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை நந்தனத்தில் நடைபெறும் புத்தகக் காட்சியில் ஜன.8ம் தேதி காலை 9 மணிக்கு முதல்முறையாக "சென்னை வாசிக்கிறது" என்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது; இதில் மாணவர்கள் வாசிக்கும் புத்தகங்கள் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் இந்த வாசிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்’’ என கூறப்பட்டுள்ளது.

x