மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 16 குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு மருந்துகள், ஊழியர்கள் பற்றாக்குறை காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் நகரில் சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 16 குழந்தைகள் உட்பட 31 பேர் 48 மணி நேரத்தில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை டீன் ஷியாம்ராவ் வாகோடெ கூறுகையில், ‘‘மரணமடைந்தவர்களில் பலர் 70-ல் இருந்து 80 வயதான முதியவர்கள். குழந்தைகள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தன. மருந்துகள், பணியாளர் தட்டுப்பாடு இல்லை. மருந்துகளை நோயாளிகளின் உடல்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதுதான் இறப்புக்குக் காரணம்’’ என்று கூறினார்.
எனினும், மருந்துகள், ஊழியர்கள் பற்றாக்குறையே உயிரிழப்புக்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உயிரிழப்புகள் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கடவுளே என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார்... நடிகை குஷ்பு நெகிழ்ச்சி!