மத்திய அரசு வரிச்சலுகை! விவசாயிகள் ஹேப்பி... பொதுமக்கள் அச்சம்


வெங்காயம்

பெங்களூரு ரோஸ் வெங்காயத்துக்கு மத்திய அரசு ஏற்றுமதி வரி விலக்கு சலுகை அளித்துள்ளது அம்மாநில விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் 'ஈருள்ளி' என அழைக்கப்படும், சின்ன வெங்காயத்தை பணப்பயிராக விவசாயிகள் விளைவிக்கின்றனர். பெங்களூரு, சிக்கபல்லாப்பூர், கோலார் மாவட்டங்களில் விளையும் சின்ன வெங்காயம் ரோஸ் நிறத்தில் பளபளப்பாக இருக்கும். இதை 'பெங்களூரு ரோஸ் வெங்காயம்' என்று சந்தையில் அழைக்கின்றனர்.

ஆண்டுதோறும் 500 கோடி ரூபாய் மதிப்பில், பெங்களூரு ரோஸ் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மலேஷியா, இந்தோனேஷியா, இலங்கை ஆகிய நாடுகளில் பெங்களூரு ரோஸ் வெங்காயத்தை மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.

கடந்த ஜூலையில் தக்காளி, வெங்காயம் விலை ஏறத் துவங்கிய நிலையில் விலையேற்ற சுமையில் இருந்து மக்களை பாதுகாக்க ஏற்றுமதி வெங்காயம் மீது மத்திய அரசு 40 சதவீத ஏற்றுமதி வரி விதித்தது. இதனால் ஏற்றுமதி குறைந்து உள்நாட்டில் வெங்காயம் அதிகளவில் விற்பனை செய்யும் நிலை உருவானது.

வெங்காயம்

இதனால் உள்நாட்டில் வெங்காயத்தின் விலை குறைய ஆரம்பித்தது. விலை குறைவால் விவசாயிகள் அதிக லாபம் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம் பெங்களூரு ரோஸ் வெங்காயத்துக்கு ஏற்றுமதியை நீக்குவதாக அறிவித்துள்ளது. இதற்கு கர்நாடகா விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலையில் கிலோ 60 முதல் 80 ரூபாய் வரை விற்கப்படும் ரோஸ் வெங்காயம் இதனால் மேலும் விலை உயரக்கூடும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

x