மேட்டூர் அணை நீர்வரத்து சற்று உயர்வு


சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று சற்று உயர்ந்துள்ளது.

டெல்டா பாசன விவசாயத்திற்குப் பயன்படும் மேட்டூர் அணை கர்நாடகம் மற்றும் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த கன மழையால் நீர்வரத்து அதிகரித்து இந்த ஆண்டு நிரம்பி வழிந்த நிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறது. அதனால் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வரும் நிலையே தொடர்கிறது. கடந்த 15 வருடமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர் அளவு பெருமளவு குறைந்து காணப்படுகிறது.

மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 119.39 அடியாக உள்ள நிலையில் நேற்று அணைக்கு வரும் நீரின் அளவு 10,511 கன அடியாக இருந்தது. இன்று காலை அது சற்று உயர்ந்து 11,051 அடியாக அதிகரித்திருக்கிறது. டெல்டா பாசனத்திற்காக சுரங்க மின் நிலையம் வழியாக 15,000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

x