பேசிக்கிட்டாங்க


தஞ்சாவூர்

டீக்கடை ஒன்றில்...

“அதென்ன மாஸ்டர்? 'விரைவில் வடை, பஜ்ஜி விலை உயரும்'னு டீஸர் கணக்கா ஒரு போர்டு..?"

“ஏற்கெனவே அரிசி, உளுந்து விலையெல்லாம் ஏறிடுச்சி. கரன்ட் பில் வேற ஏறப்போகுது. அப்போ... டீஸர் போடாம வெறும் டீயை மட்டுமா போட்டுக்கிட்டு இருப்பேன்?!”

“கவர்மென்டே பரவாயில்லைன்னு நினைக்க வைக்கிறீங்க பாருங்க. அங்கே நிக்கிறீங்க மாஸ்டர் நீங்க!”

- பா து பிரகாஷ்,

தஞ்சாவூர்

வேதாரண்யம்

மேலவீதியில் இருவர்...

“என்ன சார்... பெட்ரோல் விலை ஏறிடுச்சுன்னு இப்பதானே பேட்டரி வண்டி வாங்கினீங்க? இப்ப சைக்கிள்ல வர்றீங்களே... ‘சர்க்கரை’ ஏறிடுச்சா?”

“சர்க்கரை இல்லப்பா. அரசாங்கத்தோட அக்கறை ஏறிடுச்சு. எல்லாத்தையும் விலையேத்திட்டா எல்லாரும் சைக்கிள் ஓட்டி சந்தோஷமா இருக்கலாம்ல...”

“புரியுது சார். சோலார் பைக் வந்தாதான் இந்தக் கோளாறு எல்லாம் தீரும் போல!”

- ந.விஜய்ஆனந்த்,

தோப்புத்துறை

திருச்சி

அரிசிக் கடை ஒன்றில்...

“குடோன்ல வச்சிருக்க பழைய அரிசி தானேண்ணே இது... இதுக்குமா ஜிஎஸ்டி?”

“வேணும்னா 'லூஸா' வாங்கிக்க தம்பி. ஜிஎஸ்டி இல்லாம தர்றேன்!”

“25 கிலோ அரிசி வாங்குறதுக்காக நான் லூஸாகணுமா? எனக்கு அரிசியே வேணாம்!”

-சிவம்,

திருச்சி

x