விதவிதமாக குவிந்த பழங்கள்… தொடங்கியது குன்னூர் பழக்கண்காட்சி!


நீலகிரியில் கோடை விழாவை முன்னிட்டு குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62-வது பழக்கண்காட்சி இன்று தொடங்கியது.

இதில் ஒரு மெட்ரிக் டன் எடையிலான பச்சை மற்றும் கருப்பு திராட்சை பழங்களைக் கொண்டு 9 அடி உயரம் மற்றும் 12 அடி நீளத்தில் கழுகு மற்றும் 9 அடி உயரத்தில் கரடி வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும், ஆப்பிள், ஆரஞ்சு, வாழை, சாத்துக்குடி, ஸ்ட்ராபெரி, கொய்யா பழங்களைக் கொண்டு பழக்கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பழக்கண்காட்சியை முன்னிட்டு சார்பில் பல்வேறு மாவட்டங்களின் தோட்டக்கலைத்துறை சார்பில் ஆரஞ்சு, ஸ்ட்ராபெரி, செர்ரி, முலாம் பழங்களால் ரதம், தாஜ்மஹால், மீன் உருவ அமைப்பு வடிவமைக்கப்பட்டிருந்தன. நீலகிரி மாவட்டத்தில் கோடை மழை பெய்து ரம்மியமான காலநிலை நிலவுகிறது. எனவே, பழக்கண்காட்சிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் இந்த காலநிலையை வெகுவாக ரசித்தனர்.

x