உதகையில் ஜான் சலீவன் சிலையைத் திறந்தார் முதல்வர் ஸ்டாலின்!


உதகையை நவீன மலைவாழ் உறைவிடமாக உயர்த்திய ஜான் சலீவன் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையை நவீன மலைவாழ் உறைவிடமாக உயர்த்திய ஜான் சலீவன் நினைவாக உதகை தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் ரூ.20 லட்சம் செலவில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை இன்று காலை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஜான் சலீவன் உதகையை சிறந்த உறைவிடமாக உயர்த்தி 200-ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்குகிறது. இதனைக் கொண்டாடுவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் உதகையை வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்திய ஜான் சலீவன் சிலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

இவ்விழாவில் தமிழக அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், மு.பெ.சாமிநாதன், எம்பி ஆ.ராசா. நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் உட்பட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

x