வேளாண்மைக்கு அதிக நிதி ஒதுக்கீடு#TNBudget2022


இந்த ஆண்டு தமிழக நிதிநிலை அறிக்கையில் வேளாண்மைக்கு முக்கிய அறிவிப்புக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நிதிநிலை அறிக்கையில் நீர் வளத்துறைக்காக மொத்தமாக 7338.36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல விவசாயிகளுக்கான கடன்களுக்கும் இம்முறை அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பயிர்க்கடனுக்காக 2531 கோடி, நகைக்கடனுக்காக 1000 கோடி, சுய உதவிக்குழுக்களுக்கு 600 கோடி உட்பட மொத்தம் 4130 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர வட்டியில்லா கடனுக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

64 அணைகளை புனரமைக்க 1064 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களில் கால்வாய் சீரமைப்பு மற்றும் தூர்வாறும் பணிகளுக்காக 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு. நீர்நிலை பாதுகாப்புக்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு, 4964 கிமீ தூரத்திற்கு கால்வாய்களை தூர்வார நிதி உட்பட இன்னும் பல வகைகளில் வேளாண்மைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

x