தஞ்சாவூர்
ஒரு டீக்கடையில்...
“கோவிட் டெஸ்ட் எடுத்ததுல என் பையனுக்கு பாஸிட்டிவ்னு சொல்லிட்டாங்க.”
“பாதி பேருக்கு இதேதான் சொல்றாங்களாம். கவலைப்படாதீங்க!”
“பேசாம டெஸ்ட் எடுக்காமலே ‘ஆல் பாஸிட்டிவ்'னு சொல்லிடலாம் போல!”
- பா து பிரகாஷ்,
தஞ்சாவூர்
கோவை
ஒரு நகைக் கடையில்...
“விலையைக் குறைச்சுட்டதா பட்ஜெட்ல சொல்றாங்க... நீங்க என்ன இவ்வளவு ரேட் சொல்றீங்க?”
“அம்மா குறைச்சது வைரத்தோட விலை மட்டும்தான். அதுவும் இனிமேதான் குறையும்.”
“என்னப்பா ஏத்துனா மட்டும் உடனே ஏத்துறீங்க, குறைச்சா மட்டும் உங்களுக்கு எல்லாம் ஆர்டர் வரணுமா?”
- கரு. செந்தில்குமார்,
கோவை
தஞ்சை
மருந்துக்கடை ஒன்றில்...
“என்ன சார் இது! மாத்திரையோட ‘மாஸ்க்'கும் சேர்த்துக் கொடுக்குறீங்க... நான் கேட்கவே இல்லையே?”
“மீதி சில்லறை இல்லை சார். சாக்லேட்டும் ஸ்டாக் இல்லை. அதான்...”
“அதுசரி. கேட்டா மாஸ்க் சேஃப்ட்டிக்குதான்னு சொல்வீங்க. என்ன பண்றது. இருக்கட்டும் விடுங்க.”
- அய்யாறு ச.புகழேந்தி,
தஞ்சாவூர்
கும்பகோணம்
டீக்கடை ஒன்றில் இருவர்...
“டைரக்டர் மணிரத்னத்துக்கு அமித் ஷா விருது கொடுத்திருக்காங்களாமே?!”
“அடப்பாவி. அது அமித் ஷா விருது இல்லடா.... அஸ்மிதா விருது. நீ பாட்டுக்கு அரைகுறையா நியூஸ் படிச்சிட்டு, அவர் அரசுக்கு ஆதரவான ஆள்னு அறச்சீற்ற ஸ்டேட்டஸ் போட்டுடாதே!”
- எஸ்.இராஜேந்திரன்,
கபிஸ்தலம்