மீண்டும் டெல்லிக்கு கிளம்பினார் அய்யாக்கண்ணு


டெல்லிக்குப் புறப்படும் அய்யாக்கண்ணு

விவசாயிகள் பிரச்சினைக்காக, மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்துவதற்காக மீண்டும் டெல்லிக்குப் புறப்பட்டார் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு.

டெல்லியில் நடத்திய அரைநிர்வாண போராட்டத்தின் மூலம் இந்தியாவின் கவனத்தை திருப்பியவர், விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு. அவரது விதவிதமான போராட்டத்தால் தேசிய அளவில் அனைவரது கவனமும் விவசாயிகளின் பக்கம் கவனம் திரும்பியது.

விளைபொருளுக்கு கட்டுபடியான விலை தர வேண்டும், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாயத்துக்குப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும், நதிகள் இணைப்பை தீவிரப்படுத்த வேண்டும், மேகேதாட்டு அணை திட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் தொடர்ந்து போராட்டங்களை அய்யாக்கண்ணு நடத்தி வந்தார்.

டெல்லிக்கு புறப்படும் விவசாயிகள்

மேலும் இக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மீண்டும் டெல்லி சென்று போராட்டம் நடத்த முடிவு செய்துள்ள அய்யாக்கண்ணு, இன்று (பிப்.12 சனிக்கிழமை) காலை 6.40 மணிக்கு திருச்சியில் இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை புறப்பட்டார். அங்கிருந்து, இன்று மாலை புறப்படும் ஜி.டி எக்ஸ்பிரஸ் மூலமாக டெல்லிக்கு செல்கிறார். அங்கு மீண்டும் தனது போராட்டத்தைத் தொடங்க உள்ளார். அவருடன் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்றுள்ளனர்.

x