கடனை தள்ளுபடி செய்யணும்; கொள்முதல் அளவை 3,000 மூட்டையாக உயர்த்தணும்!


ஆலோசனைக் கூட்டத்தில் அய்யாக்கண்ணு

500 ஏக்கருக்கு ஒரு கொள்முதல் நிலையம் என்ற விகிதத்தில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும், கொள்முதல் நிலையத்தில் நாளொன்றுக்கு 3000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும், கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு நிலைய ஊழியர்கள் லஞ்சம் பெறுவதை முற்றாகத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அய்யாக்கண்ணு

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் இன்று ( ஜன.19) நடைபெற்றது. கடலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்

இக்கூட்டத்தில், மேகேதாதுவில் கர்நாடகம் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது, 100 நாள் வேலையாட்களை மழைக்காலங்களில் விவசாய வேலைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும், கூட்டுறவு சங்கங்களில் நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகையை கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் சான்றிதழ்படி வழங்க வேண்டும், 2016 ல் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், காட்டு மிருகங்கள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க வேண்டும், வைகை-குண்டாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

x