உலக குருதி கொடையாளர் தினம்: கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்ததான விழிப்புணர்வு பேரணி


கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரத்த தான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் ஆட்சியர் மீ.தங்கவேல்.

கரூர்: உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர தொடங்கி வைத்தார்.

உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறை சார்பில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. அத்துடன் ரத்த நன்கொடையின் 20-ம் ஆண்டு கொண்டாட்ட விழாவும் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொ) பி.ராஜா தலைமையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த அந்த பேரணியை கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ரத்த தான விழிப்புணர்வு பேரணி கரூர் காந்தி கிராமம் வழியாக செல்கிறது.

மருத்துவமனையில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி காந்தி கிராமம் இரட்டை தண்ணீர் தொட்டி வரை சென்று மீண்டும் மருத்துவமனையில் நிறைவுற்றது. பேரணியில் மருத்துவ பேராசிரியர்கள், மாணவர்கள், குருதி கொடையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.