பேசிக்கிட்டாங்க...


வேதாரண்யம்

கடைவீதியில் இருவர்...

"என்னடா... ஒமைக்ரானுக்குப் பயந்து கொஞ்ச நாளா ஒழுங்கா மாஸ்க் போட்டே... இப்ப மாஸ்க் போடாம அலையிறே?”

“அதான் ஒமைக்ரானால பெருசா பிரச்சினை இல்லைன்னு நியூஸ்ல சொன்னாங்களே... அப்புறம் எதுக்கு மாஸ்க்கு?”

“அடப்பாவி... பழைய கரோனா இன்னும் சுத்திக்கிட்டுத்தாண்டா இருக்கு. மரியாதையா மாஸ்க்கை வாங்கி மாட்டு!”

-மருத.வடுகநாதன்,

வேதாரண்யம்

தஞ்சை

ஒரு திருமண மண்டப பந்தியில்...

“நீங்க பொண்ணுக்குச் சொந்தமா... பையனுக்குச் சொந்தமா?”

“ரெண்டு பக்கமும் சொந்தம்தான்..!”

“இது... கலப்புத் திருமணம் ஆச்சே, எப்படி ரெண்டு பக்க சொந்தம் இருக்க முடியும்?”

“ரெண்டு குடும்பமும் எனக்குத் தெரியும்னு சொன்னேன். பிரியாணியைக் கன்டினியூவ் பண்ணட்டுமா, கைகழுவட்டுமா?”

-வி.ரேவதி,

தஞ்சை

கோவை

டிராஃபிக் சிக்னலில்... பைக்கில் இருவர்

“ மாப்பு... 10 மணி வரைக்கும் டாஸ்மாக் இருக்கும்னு சொல்லிட்டாங்க. அதனால பொறுமையாப் போகலாம்...”

“நீ சைடு டிஷ் திங்கிற ஆளுதானடா. இவ்ளோ அக்கறையா பேசுறே?”

“வேற வழி? வழக்கம்போல 8 மணிக்குக் கடையைச் சாத்திடுவாங்கன்னு நீ போற வேகத்தா பார்த்தா... பின்னாடி உட்காந்து இருக்கிற எனக்குல்ல பயமா இருக்கு!”

- கரு. செந்தில்குமார்,

கோவை

திருச்சி

ஹோட்டல் ஒன்றில் கஸ்டமரும் சர்வரும்..

“சார்... இந்த ஐம்பது பைசா காயினை ஏன் இங்கேயே வச்சிட்டுப் போறீங்க?"

“அது டிப்ஸூப்பா...”

“பரவாயில்லை நீங்களே வச்சுக்கோங்க சார்... சில்லற கிடைக்காம ரோட்டுல அலையும்போது உங்களுக்கு உதவும்!”

(கஸ்டமர் ஷாக்காகிறார்!)


- சிவம்,

திருச்சி

சிதம்பரம்

ஆசிரியர் நகரில்...

“என்னங்க இது... பால் இவ்ளோ தண்ணியா இருக்கு? அடுப்புல வெச்சுக் காய்ச்சினா பொங்கவே மாட்டேங்குது.”

“பசும்பால் அப்டிதாம்மா தண்ணியா இருக்கும். ஏன்னா, பசு நிறைய தண்ணி குடிக்கும். எருமைப் பால் தான் திக்கா இருக்கும்."

“அப்ப உங்க பசுமாட்டுக்குத் தண்ணிக்குப் பதிலா எருமைப் பால் குடுங்க. அப்பயாச்சும் திக்கா பால் வருதான்னு பார்க்கலாம்!”

- ஆர்.சுந்தரராஜன்,

சிதம்பரம்

x