பிலிப்பைன்ஸ் பெண்ணை காதலித்து தமிழ் முறைப்படி மணந்த புதுச்சேரி இளைஞர்!


புதுச்சேரி: பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை காதலித்து தமிழ் முறைப்படி புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் திருமணம் செய்து கொண்டார். மணமக்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட் ராம். பி.டெக் படித்த இவர் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்று தனியார் நிறுனவம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அப்போது பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கிலேசி பெத் சிம்பானன் ஓபா என்ற பெண்ணுடன், வெங்கட் ராமுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு இருவரும் கடந்த 10 வருங்களாக காதலித்து வந்தனர்.

பின்னர் பணி முடிந்து வெங்கட் ராமன் சொந்த ஊரான புதுச்சேரிக்கு திரும்பிய நிலையில், இரண்டு பேரும் தொலைபேசி மூலம் பேசி வந்துள்ளனர். இரு வீட்டினர் சம்மதம் தெரிவித்த நிலையில் வெங்கட் ராமுக்கும், கிலேசி பெத் சிம்பானன் ஓபாவுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை பொன்னு மாரியம்மன் கோவிலில் இன்று தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

மணப்பெண் தமிழ் முறைப்படி கூரை சேலை கட்டி மேல தாளங்கள் முழங்க அர்ச்சகர் மந்திரங்கள் ஓத சாஸ்திரம் சம்பரதாயத்துடன் திருமணம் நடந்தது. இதில் இரு விட்டாரின் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கொண்டு மணமக்களை அர்ச்சனை தூவி வாழ்த்தினர். பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து பெண்ணின் உறவினர்கள் திருமணத்தை காணும் வகையில் இணையதளம் மூலமாக நேரடியாக காணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த என்பது குறிப்பிடத்தக்கது.