பேசிக்கிட்டாங்க


கோவை

குனியமுத்தூரில் (ஒரு வீட்டில்) இருவர்...

“என்னடா... எப்பவும் போனும் கையுமா இருப்ப? இப்ப டிவியையே உத்து உத்துப் பார்த்துக்கிட்டு இருக்க?

“ஸ்கூலுக்கெல்லாம் லீவு விட்டுருக்காங்க, அதுல நம்ம மாவட்டம் வருமான்னு...”

“இதே வேலைடா உங்களுக்கெல்லாம். கரோனாவுக்கு விட்ட லீவு போதாதா? இப்பதான் ஸ்கூல் திறந்திருக்காங்க... அது பொறுக்கலையா?”

- பா.சக்திவேல்,

கோயம்புத்தூர்

தஞ்சாவூர்

ஒரு டீக்கடையில்...

“என்ன மாஸ்டர் இது... டீ இப்பவும் பத்து ரூபாயா?!”

“ஊர்லதான் இருக்கியா... அது பல மாசமா பத்து ரூபாய்லதானே ஓடுது?!"

“அது தெரியுது! டீ விலையை ஏத்தினப்ப காரணம் கேட்டதுக்கு, பெட்ரோல், டீசலைக் காரணம் சொன்னீங்க. இப்பத்தான் பெட்ரோல், டீசல் விலையைக் குறைச்சிட்டாங்களே... இப்பயாச்சும் டீ விலையைக் குறைக்கிறது?!"

“அதெல்லாம் காசு கொடுத்து டீ குடிக்கறவங்க கவலைப்படணும். யார்கூடவாவது வந்து ஓசிக்கு டீ குடிக்கற நீ ஏன்யா கவலைப்படறே?!"

-தே.ராஜாசிங்ஜெயக்குமார்,

தஞ்சாவூர்

மதுரை

ஒரு குடியிருப்புப் பகுதியில்...

“தினமும் அந்த ஆளு இந்த வழியாப் போறப்போ நீ மாஸ்க் கழட்டிட்டு நிக்கிறியே... ஏன் மாப்ஸ்?”

“அவர்கிட்ட நான் கடன் வாங்கியிருக்கேன் மச்சி.”

“அதுக்கு ஏன்டா மாஸ்க்கைக் கழட்டணும்? மாஸ்க் மாட்டுனாத்தானே அடையாளம் தெரியாது?!”

“கடன் வாங்கும்போது மாஸ்க் போட்டிருந்தேன்டா. அதனாலதான்.”

“அட கடன்காரா!”

- கந்தபெருமாள்,

பஹ்ரைன்

தஞ்சாவூர்

ரயில்வே ஸ்டேஷன் அருகே இருவர்...

“என்னடா.. தீபாவளி லீவு முடிஞ்சு இன்னும் ஊருக்குப் போகாம இங்கேயே சுத்திக்கிட்டு இருக்கே?"

“எங்கே... சென்னைதான் மிதக்க ஆரம்பிச்சிருச்சே... எப்படிப் போறதாம்?”

“ஏன் போட்லே கிளம்பேன்... ஏரிக்குள்ளே வூட்டைக் கட்டிட்டு ஏரியா மூழ்கிடுச்சு, எங்க வூட்ல வெள்ளம் வந்துடுச்சுன்னு புலம்பினா?”

- பா.து.பிரகாஷ்,

தஞ்சாவூர்

x