தொல்லியல் பார்வை


குடைவரைக் கோயில்களை அமைப்பதில் கைதேர்ந்தவர்கள் பல்லவ மன்னர்கள். இவர்கள் காலத்தில், கி.பி. 7-ம் நூற்றாண்டில் எடுப்பிக்கப்பட்டது இந்த மகேந்திரவாடி குடைவரைக் கோயில்.

வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுகாவில் வரும் மகேந்திரவாடியில் இருக்கிறது இந்தக் கோயில். குணபரன் எனும் மகேந்திர பல்லவனால் அமைக்கப்பட்ட திருமால் கோயில் இது. இந்தக் கோயிலில் பல்லவ கிரந்த எழுத்துகள் கொண்ட கல்வெட்டு ஒன்றையும் சிதிலமடைந்த நிலையில் பார்க்க முடிகிறது.

மகேந்திர விஷ்ணு கிரகம் என்றும் சொல்லப்படும் இதன் உள் மண்டபம், இரு பகுதிகளாக உள்ளது. இதில் 2 வரிசைகளில் வரிசைக்கு 2 வீதம், மேலும் கீழும் சதுரவெட்டு முகம் கொண்ட தூண்கள் உள்ளன. முன்வரிசைத் தூண்களின் சதுரப் பட்டையில் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

x