தொல்லியல் பார்வை


சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பாக, விஜயநகர மன்னர்களால் கட்டி எழுப்பப்பட்ட ஸ்ரீ பட்டாபி ராமர் கோயில் இது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள செஞ்சிக்கோட்டையின் அடிவாரத்தில் உள்ள வெங்கட்ராமர் கோயிலை பலரும் அறிந்திருப்போம். அதன் அருகிலேயேதான் இருக்கிறது ஸ்ரீ பட்டாபி ராமர் கோயில்.

விஜயநகர மன்னர்களின் சிற்பக் கலைக்கும் கட்டிடக் கலைக்கும் அழியாச் சான்றாக நிற்கும் இந்தக் கோயிலின் பிரதான அம்சமே, கலைநுட்பத்துடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட 12 கால் ஊஞ்சல் மண்டபம்தான்.

இந்த ஊஞ்சல் மண்டபத்தின் படிக்கட்டுகளில் விஜயநகர அரசின் முத்திரையும் இருப்பது காணக்கிடைக்காதது. வழிபாடுகள் ஏதும் இல்லாவிட்டாலும், இந்திய தொல்லியல் துறையால் தொன்மை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது இந்தக் கோயில். பருவமழை பரவலாகக் கொட்டிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் சென்றால், இந்தக் கோயிலை கூடுதல் எழிலுடன் ரசிக்கலாம்.

x