தொல்லியல் பார்வை


மத்திய பிரதேசத்தின் குவாலியரில் இருக்கிறது, இந்த சௌஸாத் யோகினி கோயில். குவாலியருக்கு 40 கி.மீ தொலைவில், ஜபல்பூர் அருகே உள்ள சிறு குன்று அது. அதன் மீது செல்லும் 100 படிக்கட்டுகளை கடந்தால், வந்துவிடுகிறது இந்த யோகினி கோயில். இதை, ‘ஏகத்தார்சோ மகாதேவா கோயில்’ என்றும் சொல்கிறார்கள். 11-ம் நூற்றாண்டில், கச்சப்ப ஃகடா பேரரசு காலத்தில், தேவபாலா என்ற மன்னனால் கட்டப்பட்டது இந்தக் கோயில்.

வட்ட வடிவ வளாக மதில் சுவர்களுடன் அழகுற எழுப்பப்பட்ட இந்தக் கோயிலானது, வானியல் சாஸ்திரப்படியும் அமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு, நமது பாராளுமன்ற கட்டிட வளாகம்போல் காணப்படும் இந்தக் கோயிலின் கருவறை ஒவ்வொன்றிலும் 64 யோகினிகளின் சிலைகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். இதற்கு மத்தியில் மகாதேவரும் நந்தியும் வீற்றிருக்கிறார்கள். சரியான பராமரிப்புகள் இல்லாததால், இந்த அரிய கோயில் கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைந்து வருவது கவலைக்குரிய விஷயம்.

x