சென்னையில் பார்மலின் கலக்கப்பட்ட மீன்கள் விற்பனை?


சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்கெட்டில் பார்மலின் கலக்கப்பட்ட மீன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு மற்றும் மீன்வள துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்து. அதன்பேரில் உணவு பாதுகாப்பு, மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் இணைந்து சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்கெட்டில் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மொத்த மீன் நிலையம், மீன்களைப் பதப்படுத்தி வெளி மாநிலத்திற்கு அனுப்பும் இடங்களில் சோதனை நடத்தினர்.

மீன்கள் கெட்டுப் போகாமல் நீண்ட நாள் அப்படியே இருப்பதற்காக, பார்மலின் என்ற ரசாயனத்தைப் பயன்படுத்தி, சில்லறை, மொத்த வியாபாரம் செய்யப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில், இந்த சோதனை நடைபெற்றது.

சோதனையில் மீன் குடோனில் கெட்டுப்போன 200 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் பின் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சோதனை நடத்திய அதிகாரிகளிடம் ரசாயனம் கலந்த மீன்களை விற்கவில்லை என கூறி வியாபாரிகள் வாங்குவதில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

x