மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு


மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்றைவிட இன்று 27-ம் தேதி சற்று அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்துக்காக இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. கர்நாடகத்திடம் இருந்து கிடைக்கவேண்டிய தண்ணீர் கிடைக்காததால், அணையின் நீர்மட்டம் மளமளவென்று குறைந்து 66 அடிக்கு வந்துவிட்டது. இந்நிலையில், கர்நாடகத்தில் இருந்து வரும் நீரின் அளவு தொடர்ந்து ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது.

நீர்வரத்து வினாடிக்கு நேற்று 6,553 கனஅடியாக இருந்த நிலையில், இன்று அதன் அளவு சற்று அதிகரித்து 7,474 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 66.06 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 29.40 டிஎம்சி.

அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 6,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அத்துடன் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கான நீர்திறப்பு 650 கனஅடியாக உள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 14,600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று வினாடிக்கு 13,600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில், இன்று 14,600 கனஅடியாக உயர்ந்துள்ளது. கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 9,600 கனஅடி நீரும் கபினியில் இருந்து 5,000 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூருக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரிக்கும் என நம்பலாம்.

x