அரசு அனுமதி கொடுத்தால் தான் பிழைப்பு


சிலை செய்யும் கலைஞர்கள்

இந்த வருடம், விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அரசு அனுமதி கொடுத்தால் தான் தாங்கள் பிழைப்பு நடத்த முடியும் என்று கண்ணீர் மல்க இறைஞ்சுகிறார்கள், சிலை செய்யும் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள்.

எதிர்வரும் 10.09.2021 அன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை நடைபெறுகிறது. கரோனா கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டு கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் வழிபடவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த வருடம் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அரசு தரப்பில் அனுமதி அளிக்கப்படும் என்ற நம்பிக்கையில், சிலை தயாரிப்பு தொழில் சிறப்பாகத் தொடங்கி செம்மையாக நடைபெற்று வருகிறது.

அதனால், இந்த ஆண்டு விநாயகர் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பது அவர்களின் வேண்டுகோள். அப்படி கொடுக்கப்பட்டால் தான், கடந்த 2 ஆண்டுகளாக முடங்கிப்போயுள்ள தங்களின் வாழ்வாதாரம் சற்றாவது மீளும் என்கிறார்கள். அதனால், அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட இந்த வருடம் விநாயகர் சிலை ஊர்வலத்தை கரோனா தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு நடத்த புதுச்சேரி மற்றும் தமிழக அரசுகள் அனுமதி அளிக்க வேண்டும் என்று இரு மாநில அரசுகளுக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து காத்திருக்கிறார்கள்.

x