அம்மா காலத்துல யாருக்குமே கரோனா இல்லை


சானா
readers@kamadenu.in

பரந்து விரிந்த ஹாலில் டிவி பார்த்தபடி படுத்திருக்கிறான் பாச்சா. பச்சைப் பசும் மாடியிலே... பறந்தபடி அங்குமிங்கும் உலாத்திக்கொண்டு பாட்டு கேட்டுக்கொண்டிருக்கிறது பறக்கும் பைக். எங்கும் சுகந்தம். எதிலும் வசந்தம். திடீரென கீழே ஹாலுக்கு வந்து பாச்சாவைப் பிடித்து உலுக்கி, “ஏந்துரு பாச்சா ஏந்துரு” என்று பைக் கத்தியதைக் கேட்டதும் படக்கென கண் திறந்து பார்த்தான் பாச்சா. பார்த்தால், பார்த்ததெல்லாம் பகல் கனவு.

ஏமாற்றத்தில் தலையை உலுக்கிக்கொண்டவனைப் பார்த்து இடியென சிரித்த பைக், “என்ன பாச்சா? கவர்மென்ட் தர்ற புதுவீட்டு கனவுல மொத்தமா மூழ்கிட்ட போல… உனக்கும் எழுத்தாளர்னு நினைப்பு வந்துடுச்சாக்கும்? நாமளே தலைவர்களைப் பேட்டி எடுக்கிறோம் பேர்வழின்னு தகராறு பண்ணி, மண்டை தப்பியது மயான சாமி புண்ணியம்னு ஓடிட்டு இருக்கோம்… இந்த லட்சணத்துல இலக்கியவாதி வேஷமல்லாம் தேவைதானா?” என்று கவுண்டமணி கணக்காகக் கடிந்துரைத்தது.

தலையில் மிச்சமிருந்த கனவு இல்லக் கனவின் சுவடுகளைத் தட்டிவிட்டு கப்சிப்பென ரெடியானான் பாச்சா.

x