பேசிக்கிட்டாங்க...


திருச்சி

காவிரி பாலத்தில் இருவர்...
“என்னடா காவிரி ஆத்தை இப்படி வெறிச்சுப் பார்க்கற?”
“கரோனா மூணாவது அலை வருமாமே?”
“காவிரி ஆத்துலயா?!”
“ஆத்துல இல்லைடா... நம்ம நாட்டுல வரும்னு வரிசையா நியூஸா வந்துட்டு இருக்கு. அதான் கவலையா இருக்கு.”
“கவலையெல்லாம் சரிதான். ஆனா, இன்னமும் உன்னைய மாதிரி மாஸ்க் போடாம திரிஞ்சா… மூணாவது அலை என்ன... முப்பதாவது அலைகூட வரும்!”
(நண்பர் பாக்கெட்டிலிருந்த மாஸ்க்கை அவசரமாய் எடுத்து அணிகிறார்.)
- சிவம், திருச்சி

தஞ்சாவூர்

காவேரி நகரில் இருவர்...
“முதல்ல மூக்கையும் வாயையும் மூடச்சொன்னாங்க... இப்ப கறுப்புப் பூஞ்சை நோய், வெள்ளைப் பூஞ்சை வருதுன்னு கண்ணையெல்லாம் மூடச்சொல்வாங்க போல… இப்படியே போனா உடம்பு பூரா மாஸ்க் மாட்டிக்க வேண்டியிருக்கும் போல… என்ன கொடுமை மாப்ஸ் இது!?”
“கறுப்பு, வெள்ளை மட்டுமில்ல கலர் கலரா பூஞ்சை வருதுன்னு நியூஸ் வருது. ஒரேயடியாக் கண்ணை மூடாம இருக்கணும்னா கொஞ்ச நாளைக்கு மாஸ்க் மாட்டிக்கிட்டு வீட்டுக்குள்ளேயே இருந்துக்க வேண்டியதுதான்.”
- தே.ராஜாசிங்ஜெயக்குமார், தஞ்சாவூர்

x