ப்ளீஸ்... தெனமும் வாங்களே!


ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

டாக்டர் க்ளினிக் வாசல்ல காத்திருந்தேன். எந்த பேஷன்ட் வந்தாலும் நான் பின்னுக்கு நகர்ந்துக்கிட்டு. வந்தவங்க என்னையே விசித்திரமா பார்த்தாங்க.

“நீங்க போங்க... எனக்கு ஒண்ணும் அவசரமில்ல”ன்னு சொன்னா இன்னும் குழப்பம்.

வேற ஒண்ணுமில்ல. டாக்டர் க்ளினிக் வச்சிருக்கிறது என் வீட்டுலதான். என்ன... ஒங்களுக்கும் குழப்புதா?

x