பேசிக்கிட்டாங்க...


கோவை

எட்டிமடை அருகே இரு பெண்கள்...
“என்னக்கா... உச்சி வெய்யில்ல இப்படி வெறும் ரோட்டை வெறிச்சிப் பார்த்துக்கிட்டுருக்க? உள்ள குழந்தை அழுற சத்தம் கேட்குது, போய் என்னன்னு பாரு.”
“அதுக்குச் சோறு ஊட்டத்தான் யாராவது வாராங்களான்னு பார்த்துக்கிட்டு நிக்கிறேன். ஓட்டு கேட்க வர்றவங்க துணி துவைச்சி கொடுக்குறாங்க, தோசை சுட்டு தர்றாங்க, பிள்ளைக்கி சோறு ஊட்டிவுடமாட்டாங்களா..?”
 (“இவ வெள்ளந்தியா கேக்குறாலா விவரமா கேக்குறாளான்னு தெரியலையே”முணுமுணுத்தபடி நகர்கிறார் அந்தப் பெண்மணி)
- பா.சக்திவேல், கோயம்புத்தூர்

துறையூர்

விநாயகர் தெருவில் இரு பெண்கள்...
‘‘எங்கக்கா உங்க வீட்டுக்காரரை இப்பல்லாம் பார்க்கவே முடியல?”
‘‘எலெக் ஷன் நேரத்துல அவரு வீட்டுக்கு எங்க வர்றாரு? டெய்லி எவனாவது பிரச்சாரத்துக்கு வந்துடறானுங்க... கூட்டத்துல போயி ஒப்புக்குச் சப்பாணியா நிக்கிறதுக்குக் குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கிக் குடுத்துடறானுங்க... இந்த மனுஷனும் குடும்பம் குழந்த குட்டிங்கிற நெனப்பு இல்லாம எந்த நேரமும் குடிச்சுப்புட்டு எங்கேயாவது கவுந்து கிடக்குது... எலெக் ஷன்ல இப்படியெல்லாம் கூத்து நடக்குது. எதெதுக்கோ கண்ணீர் விடுறாங்க…. நம்ம கண்ணீரையெல்லாம் யாரு கண்டுக்கிறா?”
“சரி விடுக்கா! ஒரு வாரத்துல எலெக்‌ஷன் முடிஞ்சுரும் அப்புறம் உம் புருசனை உருட்டி மிரட்டி ஏதாச்சும் வேலைக்குப் போகச் சொல்லு.”
- வி. ஷோபா, திருச்சி

x