பேசிக்கிட்டாங்க...


புதுக்கோட்டை

ஹோட்டல் ஒன்றில்...
“என்னப்பா தயிர் சாதம் கேட்டா... கூழ் மாதிரி இப்படி குழைச்சுக் கொண்டுவந்து வைக்கறே?”
“சீக்கிரம் செரிமானம் ஆகும் சார்.”
“தயிர் சாதமே சீக்கிரம் செரிமானம் ஆகும் சாப்பாடுதானே?”
“இது இன்னும் சீக்கிரம் 
செரிமானம் ஆகும் சார். உடம்புக்கு 
ரொம்ப நல்லது.”
“உங்க தப்பை மட்டும் ஒத்துக்கவே மாட்டீங்களே... சீக்கிரம் செரிமானம் ஆச்சுன்னா மறுபடி ரெண்டு மணி நேரத்துல இங்கேதான் வரணும். சரி... சரி, வாங்கியாச்சு. ஒரு வேலை பண்ணு. இந்த ஸ்பூனை எடுத்துட்டு, ஒரு ஸ்ட்ரா கொண்டு வா. ஒரே உறிஞ்சா உறிஞ்சிடுறேன். டைமாவது மிச்சமாகும்.”
-ரஹீம் கஸ்ஸாலி, அரசர்குளம்

மதுரை

டீக்கடை ஒன்றில் இரு அலுவலர்கள்...
“என்ன அநியாயம் சார் இது... 75 வயசுக்கு மேல இருக்கறவங்களுக்கு மட்டும் வருமான வரி விலக்குன்னு பட்ஜெட்டுல அறிவிச்சுருக்காங்க?"
“அட என்ன சார்… இதுலயும் குத்தம் கண்டுபிடிக்கணுமா? வேணும்னா ஒண்ணு பண்ணுங்க. உங்களுக்கு நாப்பது வயசு... உங்க மேடத்துக்கு முப்பத்தி ஏழு வயசு. ரெண்டையும் கூட்டுனா 77 வயசு வருது... இன்கம் டாக்ஸ் கட்டமாட்டோம்னு சொல்லிப் பாருங்களேன்!"
“உங்களுக்கு ஏன் இன்னும் ப்ரமோஷன் கெடக்கலைன்னு இப்போ புரியுது சார்!"
- எம். விக்னேஷ், மதுரை

x