பேசிக்கிட்டாங்க...


சென்னை

தியேட்டர் ஒன்றின் அருகில்…
“அங்க பாருய்யா… ஸ்கூல் யூனிஃபார்மோட ‘மாஸ்டர்’ படம் பார்க்க வந்திருக்கானுங்க பசங்க...”
“பாடம் நடத்துற மாஸ்டரைப் பார்க்க போறேன்னுட்டு… படம் காட்டுற மாஸ்டரைப் பார்க்க வந்துட்டாங்க போல..?”
“ஆமா… இப்படியெல்லாம் இருந்தா பசங்க எப்படிய்யா உருப்படறது?”
“ம்க்கும். நாமெல்லாம் வாத்தியார் கிளாஸைக் கட்டடிச்சிட்டு, வாத்தியார் படம் பார்க்கப் போன கதையெல்லாம் மறந்துபோச்சாக்கும்! விடு... பசங்க என்ஜாய் பண்ணிட்டுப் போகட்டும். பொறுப்பு வந்தா பொழைச்சுக்குவாங்க.”
- பாலாஜி சண்முகம், சென்னை.

கரூர்

ஐந்து ரோடு அருகில்...
“மாமு... இனிமேல் காதலர் தினத்தை கவர்மென்ட்டே விழா எடுத்துக் கொண்டாடப் போகுதாமே, நெசமா?”
“அட மக்குப் பயலே... பிப்ரவரி 14-ம் தேதி இல்லை… 
பிப்ரவரி 24-ஐத்தான் அரசு விழாவாகக் கொண்டாடறாங்க. அது ஜெயலலிதா பிறந்த நாள். மறந்துட்டியா?”
“ஆமால்ல! வர வர ஞாபகமறதி அதிகமாகுது... அகத்திக்கீரை சாப்பிடணும்."
“அடேய் ஞாபகப் புலி. அதுக்கு வல்லாரைக் கீரையைச் சாப்பிடணும்டா.”
- பாலு இளங்கோ, வேலூர்.

x