பேசிக்கிட்டாங்க...


திருச்சி

கடைவீதியில் இருவர்...
“மச்சி... மாஸ்டர் படத்துக்கு டிக்கெட் இருக்கு. வேணுமா?”
“ஃப்ரீயா குடுத்தா வேணாம்னா சொல்லப் போறேன்?”
“எது ஃப்ரீயா? ஒரு டிக்கெட் 500 ரூபா. அஞ்சு டிக்கெட் இருக்கு. எடு 2,500 ரூபாயை...”
“நான் ரேஷன் கடைக்குப் போனதப் பாத்துட்டு வழிப்பறி செய்யப் பார்க்கற! அதுக்கு வேற ஆளைப்பாரு!”
“அடப்பாவி... பொங்கல் பரிசைக் காப்பாத்திக்க அஜித் ரசிகனாவே ஆயிடுவ போல.”
- சிவம், திருச்சி.

வேலூர்

ஆரணி செல்லும் பேருந்தில்...
“என்ன பெரியவரே... எம்மேல சாஞ்சி சாஞ்சி விழுறீங்க... மாஸ்க் வேற போடலை. மத்தவங்களைப் பத்திக் கவலைப்படவே மாட்டீங்களா?”
“என்ன தம்பி பேசிக்கிட்டே போறே? இப்பெல்லாம் யாரு மாஸ்க் போடுறாங்க?”
“அப்படியா சேதி!? இனிமே மாஸ்க் போடாதவங்களைக் கண்டா அவங்களுக்கு உடனே தடுப்பூசி போடுறாங்கன்னு நியூஸ்ல சொன்னாங்களே கேட்கலையா?
குழப்பமடைந்த பெரியவர், “யப்பா கண்டக்டர், நான் அடுத்த ஸ்டாப்ல இறங்கணும். நிறுத்தச் சொல்லுய்யா” என்கிறார் பதற்றத்துடன்!
- அ. சுகுமார், வேலூர்.

x