பாலமேடு ஜல்லிக்கட்டைவிட பாஜக ஜல்லிக்கட்டு தான் ஃபேமஸு!- குஷ்பு குதூகலம்


சானா
readers@kamadenu.in

பொங்கல் பரிசும் ஃபுல்… கரும்புமாக (எப்பவுமே தப்பாக நினைக்கக்கூடாது!) மகிழ்ச்சியுடன் வலம் வரும் மக்களைப் பார்த்தபடி நகர் வலம் வந்தனர் பைக்கும் பாச்சாவும்.

பண்டிகைக் காலம் என்பதால், பட்டியலை பைக்கே இறுதிசெய்து கொள்ளலாம் என்று பாச்சா பகிர்ந்திருந்தான். தமிழகத்தில் தாமரை மலர வேண்டும் என்பதற்காகத் தவமிருந்துவரும் நமீதாவைத்தான் முதலில் பேட்டியெடுக்க வேண்டும் என்று பைக் நச்சரித்துக்கொண்டே இருந்தது. எனவே, நமீதாவிடமிருந்தே நாளைத் தொடங்கலாம் என்று முடிவெடுத்தான் பாச்சா.

பாஜக கொண்டாடிய பஞ்சுப் பொங்கலுக்குக் கிடைத்த அமோக வரவேற்பால் (!) ஆனந்தமடைந்திருந்த நமீதா, தன்னை நமஸ்கரித்த பாச்சாவையும் பைக்கையும் பார்த்து கை உயர்த்தி, “போங்களோ போங்கள்…” என்றார் கன்னம் சிவக்க. இந்திக்கும் தமிழுக்கும் இடைப்பட்ட ஒரு மொழியைப் பேசி கட்சிப் பணியாற்றிவரும் நமீதா சொன்ன நல்வாழ்த்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாத இருவரும், ‘ச்சே… வந்தவுடன் விரட்டுகிறாரே’ என்று நொந்துபோய், கொள்கைக்குப் புது இலக்கணம் வகுத்த குஷ்புவைச் சந்திக்கக் கிளம்பினர்.

x