தபால் வாங்கலியோ... தபால்!


ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

சின்னவயசுல தனி வீடா, பன்மாடிக் குடியிருப்பான்னு பட்டிமன்றம் வச்சா, ‘தனிவீடு... சுத்தி தோட்டம்’னு கும்மி அடிச்சுகிட்டிருந்தேன். அப்புறம் எங்க ஊர்ல தனி வீடு கட்டணும்னா எல்லா பேங்க்லயும் கடன் வாங்கி ஏமாத்தினாத்தான் முடியும்னு புத்திக்கு எட்டுச்சு. அதுக்கெல்லாம் நமக்கு சாமர்த்தியம் பத்தாது. அதனால அப்பார்ட்மென்ட்ல ரெண்டாவது மாடில வீடு கிடைச்சப்ப ஹேப்பியா வந்தாச்சு.

அப்பவாச்சும் கொஞ்சம் சுதாரிப்பா இருந்துருக்கணும். செகரட்டரின்னு அன்னப்போஸ்ட்டா செலக்ட் பண்ணதும் அம்மிணியைப் பெருமையா லுக் விட்டேன். அவங்களுக்கும் பெருமைதான். செகரட்டரி பொண்டாட்டின்னு எல்லா வீட்டுலயும் அடையாளம் காட்டினப்போ அவங்களுக்கு அவ்ளோ குஷி.

ஆனா, ஒலகத்துலயே மகா பேஜாரான போஸ்ட் இதான்னு கொஞ்சம் கொஞ்சமா புரிய வச்சாங்க. சாக்கடை அடைச்சுகிட்டாக் கூட குச்சிவிட்டு நோண்டணும்னு என் வரவை எதிர்பார்த்தாங்க.

x