பேசிக்கிட்டாங்க...


தஞ்சாவூர்

டீக்கடை ஒன்றில் இரு நண்பர்கள்...

“தேர்தல் வரை கரோனா இருக்கும்னு எதை வெச்சுடா சொல்றே?”
“அதுவா…? இந்தத் தடவை தேர்தலுக்கு மாஸ்க்குக்குள்ளே வெச்சு பணம் பட்டுவாடா பண்ணப்போறதா எங்க கட்சிக்காரங்க பேசிக்கிட்டாங்க… அதான் ஒரு உத்தேசமா சொன்னேன்.”
"வெளங்கிடும்! அவனவன் கரோனாவைப் பார்த்து காத தூரம் ஓடுறான். நீங்க அதுகூட தேர்தல் கூட்டணியே வெச்சுடுவீங்க போல... நல்லா வருவீங்கடா டேய்...”

- தஞ்சாவூர், தே.ராஜாசிங் ஜெயக்குமார்

x