பேசிக்கிட்டாங்க


சென்னை

ரெட்டேரி மார்க்கெட் அருகில் இரு நண்பர்கள்...
``கோயிலையெல்லாம் மத்திய அரசு தன் கட்டுப்பாட்டுக்குள்ள எடுக்கப் போறதை நினைச்சா வயித்தைக் கலக்குது!''
``உனக்கு என்னடா பிரச்சினை?''
``எங்களுக்கு சொந்தமா ஒரு கோயில் இருக்கே... வருமானம் போயிடுமே!''
``எது... உங்க வீட்டுகிட்ட ரோட்டோர வேப்பமரத்துக்கு கீழ மஞ்சள் பூசுன செங்கல்லை நேரா நிக்க வெச்சு உண்டியலை மாட்டி வெச்சிருப்பீங்களே... அதைத்தானே சொல்றே? அடேய்...  அதை மத்திய அரசு எடுத்துகிட்டுப் போய் என்னடா பண்ண முடியும்... யாராவது வெளிநாட்டு அதிபர் வந்தாங்கன்னா மதில்சுவர் கட்டக்கூட ஆகாதேடா!''
- சென்னை, அஜித்

பாளையங்கோட்டை

ஒரு டீக்கடையில்...
``அண்ணாச்சி... இஞ்சி ஆயில் பாட்டில் இருக்குற இடத்துல புதுசா  இன்னொரு பாட்டில் வச்சிருக்கீங்களே... அது என்னது?’’
``அது சானிட்டரி லிக்விட்! கை சுத்தம் செய்ய கார்ப்பரேஷன்காரங்க கண்டிப்பா வைக்கச் சொல்லியிருக்காங்க!’’
``நல்லவேளை சொன்னீங்க! இல்லைன்னா நான் வழக்கம் போல இஞ்சி ன்னு எடுத்து டீயில ஊத்தியிருப்பேன்!’’
``அப்படியே ஊத்துனாலும் ஒண்ணும் ஆகாது! கை சுத்தம் ஆகுற மாதிரி வயிறும் சுத்தமாகும் அவ்வளவுதான்...’’
- சூழவாய்க்கால், எ.முகமது

x