கரோனா காலத்திலும் கனிவான ஆட்சி!


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

கரோனா தொற்றைத் தவிர்க்க, உலகமே ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறைக்குத் தயாராகிவிட்ட நிலையில், பாச்சாவின் நிலை பரிதாபத்துக்குரியதாகிவிட்டது. கூடவே, “போனில் மட்டும் பேட்டி எடுத்தால் சரியாக வராது பாச்சா. ஏதாச்சும் மாற்று ஏற்பாடு செஞ்சுக்கோ” என்று ஆசிரியர் சொல்லிவிட்டதால் அலங்கமலங்க முழித்துக்கொண்டிருந்தான். மெடிக்கல் ஷாப்புக்குச் சென்று முகமூடி, கையுறைகள் வாங்குவது, மளிகைக் கடையில் நூடுல்ஸ் பாக்கெட்டுகளை வாங்குவது என்று முன்னெச்சரிக்கை முஸ்தீபுகளைச் செய்துவிட்டு உள்ளே நுழைந்த பறக்கும் பைக், உறைந்துநின்ற பாச்சாவைத் தட்டி எழுப்பியது.
கலவர நிலைக்கான காரணம் தெரிந்ததும், “யோவ், வெளிநாடு போக அடிக்கடி விமானம் ஏறும் மோடியே வீடியோ கான்ஃபரன்ஸிங்ல ஆலோசனை நடத்திட்டு இருக்கார். அதே பாணியில அரசியல் தலைவர்களை டீல் பண்ணிப்பாரேன்” என்று யோசனை சொன்னது. பாச்சாவின் முகத்தில் பல்ப் எரிந்தது.

முதலில் முதல்வர் பழனிசாமி.

இப்போதெல்லாம் முணுக்கு முணுக்கென்று கோபம் வந்து எதிர்க்கட்சியினருக்கு எதிராக ஏகத்துக்கு வசனம் பேசுவதை உணர்ந்து, எமோஷனைக் கட்டுப்படுத்த ‘ஆங்கர் மேனேஜ்மென்ட்’ வகுப்புக்குச் சென்றிருந்தவர் அங்கிருந்தபடியே வீடியோ கான்ஃபரன்ஸிங்குக்கு வருவதாகச் சொல்லியிருந்தார்.

x