நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்!


ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

மத்தவங்களுக்கு எல்லாம் வம்பு நடந்து வரும்னா எனக்கு மட்டும் ஃபிளைட் பிடிச்சு நேரா எங்க வீட்டு மாடியிலேயே வந்து இறங்கும்.
“இந்த ஞாயிறு மாலை நீங்க ஃப்ரீயா?” நண்பர் ஒருத்தரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். என்னவா இருக்கும். ஏதாச்சும் பார்ட்டியா... வீட்டு சாப்பாட்டிலிருந்து தப்பிச்சுக்கலாமா... இந்த நெனப்புல ஜொள் விட்டுகிட்டே நண்பருக்கு போன் போட்டேன். அதிசயமா உடனே எடுத்துட்டார்.

“மெசேஜ் பாத்தீங்களா?”
“ஆமா... ஃப்ரீதான்... ஏன் ஏதாச்சும் பார்ட்டியா?”
“அதுக்கும் மேல.”

எதையுமே சுருங்கச் சொல்லி பழக்கமில்லாத அந்த மனுசன் ஜவ்வா இழுத்துச்சு. ‘சொல்லித் தொலைய்யா...’ன்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டேன். அது அந்தாளுக்கும் கேட்டுருச்சு போல!
“காலேஜ் கவிதைப் போட்டிக்கு நீங்க நடுவரா இருக்கப் போறீங்க”ன்னாரு.
“நான் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டேன்”னு சொன்னேன்.

x