தொண்ட பத்ரம் சார்


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

வாக்கிங் போவதற்காக வான் வழியே மெரினா வந்து சேர்ந்த பாச்சா, வாட்ஸ்-அப்பில் ஆசிரியர் அனுப்பும் அன்றாடப் பட்டியலைப் பார்ப்பதற்காக, யாரோ ஒரு தலைவர் சமாதியில் யதேச்சையாகத் தரையிறங்கினான். பட்டியல் தந்த பதற்றத்தில் சற்று நேரம் கடலலையில் கால் நனைக்கலாம் என்று சென்று திரும்பியவன், பறக்கும் பைக் திகிலூட்டும் வகையில் டிக்-டாக் வீடியோவைப் பதிவு செய்வதைப் பார்த்து திடுக்கிட்டு நின்றான்.

ரஜினி, கமல் தொடங்கி சீமான் வரைக்கும் பேசிய சினிமா அல்லது சினிமா பாணி டயலாக்குகளுக்கு வாயசைத்து வாட்ஸ்-அப்பில் அனுப்பிக்கொண்டிருந்த பைக்கைப் பாய்ந்து சென்று தடுத்து நிறுத்தி,
“டிக்-டாக்ல கண்டதைப் பேசி முதுகுல டின் கட்ட வச்சுருவே போலயே? வழக்குகள் வந்தா யாருடா வாய்தா வாங்கிட்டுக் கிடக்கிறது?” என்று வாய் பொத்தினான்.

“என்னய்யா நீ… இதெல்லாம் ஒரு விஷயமா? யோகா பண்ணினா கரோனாவே காணமப்போய்டும்னு பெரிய பெரிய தலைவர்களே பேசுறாங்க. இப்படி ஏதாச்சும் பேசி இம்சைகள் கிளம்பினா, கையெடுத்துக் கும்பிட்டு கேஸையெல்லாம் காலி பண்ணிட
லாம்யா. ‘நாமெல்லாம் தமிழர்’கள் இல்லையா?” என்று கூலாக பதில் சொன்னது பைக்.
“அதுக்கெல்லாம் அரசியல் பின்புலம் வேணும்டா அலுமினிய மண்டையா. வா வேலையப் பார்ப்போம்” என்று பதற்றம் தணியாமலேயே கிளப்பிக்கொண்டு போனான் பாச்சா.

x